உக்ரேன் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்த இலங்கைத் தூதுவர்
ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது உக்ரேன் அரசாங்கம் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. உதயங்க, உக்ரேனின் பிரிவினை...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_953.html

ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது உக்ரேன் அரசாங்கம் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
உதயங்க, உக்ரேனின் பிரிவினைவாதிகளுக்கு ஆயுத விநியோகப் பணிகளில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான குற்றச்சாட்டை உக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முன்வைத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
உக்ரேனின் குற்றச்சாட்டின்படி உதயங்க, பிரிவினைவாதிகளுக்கு ரைபிள்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை விநியோகித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனின் தலைநகர் கீவ்வில் உதயங்க வீரதுங்க தங்கியிருந்தார். அத்துடன் கிளப் லங்க என்ற விருந்தகத்துக்கும் உரிமையாளராக இருந்தார்.
வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மருமகன் என்ற வகையிலேயே உக்ரேனுக்கான தூதுவர் நியமனம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அரசியல் நியமனம் என்ற அடிப்படையில் அவர் புதிய அரசாங்கத்தினால் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate