எகிப்தின் கிஸா பிரமிடுகளில் அருகே நின்று பெண்கள் சிலர் ஆபாசமாய் படம்பிடித்து வருவது அந்நாட்டு மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான, இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத மர்மங்களை உள்ளடக்கியது.
இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது. இதில் புகழ் பெற்ற பிரமிடு என்பது அந்நாட்டின் கிஸா பிரமிடு ஆகும்.
இந்த பிரமிடு அருகே நின்று ரஷ்ய பெண்கள் ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியதுடன், எகிப்து நாட்டவரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆங்கில மொழிப்பெயர்ப்புடன் எடுத்த இந்த ஆபாச படம், 3 ஆபாச தளங்களில் இடம்பெற்றுள்ளது.
இது மட்டுமின்றி ஆபாச நடிகை ஒருவர் நாட்டின் வரலாற்று சின்னமாக விளங்கும் இடங்களில் உடையில்லாமல் நடமாடியதும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எகிப்து வழக்கறிஞர் ஒருவர் மூத்த பொலிஸ் அதிகாரியிடம் புகார் கொடுத்து உள்ளார்
மேலும் உலக பிரசித்தி பெற்ற இந்த உலக அதிசய இடத்தில் இழிவுப்படுத்தும் வகையில் பல செயல்கள் நடந்துள்ளதால், இங்கு 24 மணிநேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கமெரா நிறுவப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து எகிப்து அமைச்சர் மம்தாக் அல்-தமடி கூறுகையில், ஆபாச படத்திற்கு உரிய சில வெளிப்படையான காட்சிகள் இங்கு சட்டத்துக்கு புறம்பாக எடுக்கபட்டு உள்ளது.
கிசா கல்லறைக்குள் சுற்றிபார்க்க வந்த சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தான் இத்தகைய செயலில் ஈடுபட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக எகிப்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.