என்ன விலை கொடுத்தாவது தமிழ் – முஸ்லிம் ஒன்றுமை வளர்க்கப் படல் வேண்டும்
என்ன விலை கொடுத்தாவது தமிழ் – முஸ்லிம் ஒன்றுமை வளர்க்கப் பாடல் வேண்டும் ,தமிழர்களும் , முஸ்லிம்களும் பிரிந்து வாழ்வது ஆபத்தானது என சுக...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_845.html
என்ன விலை கொடுத்தாவது தமிழ் – முஸ்லிம் ஒன்றுமை வளர்க்கப் பாடல் வேண்டும் ,தமிழர்களும் , முஸ்லிம்களும் பிரிந்து வாழ்வது ஆபத்தானது என சுகாதார இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொது செயலாளருமான எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்துள்ளார் .
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு இன்று (8) ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த அமைச்சர் ஹஸன் அலி, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ஹஸன் அலி,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையில் அமைச்சுப் பதவியேற்ற அன்று நான் மிகவும் அதிகமாக மகிழ்ச்சியடைந்தேன் என்ன விலை கொடுத்தாவது தமிழ் – முஸ்லிம் ஒற்றுமை வளர்க்கப்படல் வேண்டும். தமிழ் முஸ்லிம்கள் பிரிந்து வாழ்வது ஆபத்தானதாகும்.
கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைத்துள்ளதானது தமிழ் – முஸ்லிம் ஒற்றுமைக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாகும்.
இதே போன்று தேசிய அரசியலில் எதிர்க்கட்சியொன்று இல்லாத நல்லாட்சி மிக்க அரசாங்கத்தை அமைப்பதில் தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு பாரிய பங்களிப்பினை செய்துள்ளார்கள்.
இந்த ஒற்றுமை இந்த நாட்டின் அனைத்து இடங்களிலும் காணப்படல் வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஒரு எளிமையான மனிதர். எல்லோரும் இந்த நாட்டில் சமமாக வாழவேண்டும். சமத்துவமாக சகல சமூகங்கள் நடாத்தப்பட்டல் வேண்டுமென விரும்பும் ஒரு மனிராக அவர் காணப்படுகின்றார். அவருடைய நடவடிக்கைகள் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன, என்றும் தெரிவித்துள்ளார்