மைத்திரி பிரதமராக போட்டியிட்டால் ரணிலுக்கு பாரிய சவால்: ரோசி சேனாநாயக்க
ஜனாதிபதி மைத்திரிபால எதிர்காலத்தில் பிரதம பதவிக்காக போட்டியிட்டால், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாரிய சவாலாகி விடும் என சி...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_296.html

ஜனாதிபதி மைத்திரிபால எதிர்காலத்தில் பிரதம பதவிக்காக போட்டியிட்டால், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாரிய சவாலாகி விடும் என சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை குறைத்தால் பிரதமருக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகாரம் கிடைக்கப்படும்.
குறித்த அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கிய பின்னர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொது தேர்தலில் பிரதம வேட்பாளாராக போட்டியிடவுள்ளதாக அன்மையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தது போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாரிய சவாலாகி விடும்.
தற்பொழுது தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக சகல ஏற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றன.
அதற்கமைய எதிர்வரும் பொது தேர்தலுக்காக பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.