சேருவில பிரதேச செயலகத்தில் அபாயாவுக்குத் தடை? சாரி உடுக்க உத்தரவு
திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் முஸ்லிம் பெண்கள் அபாயாவுக்குப் பதிலாக கட்டாயம் சாரி உடுத்து வர வேண்டும் எ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_82.html
திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் முஸ்லிம் பெண்கள் அபாயாவுக்குப் பதிலாக கட்டாயம் சாரி உடுத்து வர வேண்டும் என பிரதேச செயலாளரினால் பணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்பிரதேச செயலகத்தில் பணி புரியும் முஸ்லிம் பெண்கள் அபாயாவுடனே கடமைக்குச் செல்கின்றனர். எனினும், தற்போது பிரதேச செயலாளரினால் அபாயாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..
அடுத்துவரும் புதன்கிழமை கிழமை முதல் சாரி உடுத்து வராதவர்கள் கடமைக்கு வரவேண்டாம் எனவும் அவர் பணித்திருப்பதாகத் தெரிய வருகின்றது.


Sri Lanka Rupee Exchange Rate