ஞானசார தேரர் இன்று முக்கிய வழக்குக்கு வரவில்லை.
புனித அல்குர்ஆன் அவமதிப்பு மற்றும் நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற வட்டரக்க விஜத தேரரின் ஊடகவியலாளர் மாநாட்டை குழப்பியமை ஆகிய குற்றச்சாட...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_32.html

இந்த வழக்கு விசாரணைகள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் திலினி கமகே முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தவிர்ந்த அமைப்பின் ஏனைய ஐந்து முக்கியஸ்தர்களும் விதாரந்தனிய நந்த தேரர் தலைமையில் ஆஜராகினர்.
சுகயீனம் காரணமாக ஞானசார தேரர் இன்றை விசாரணைகளில் கலந்துகொள்ளவில்லை என அவரது சட்டத்தரணி நீதவானிடம் அறிவித்தார்.
ஏப்ரல் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள அடுத்த விசாரணையின் போது ஞானசார தேரர் ஆஜராக வேண்டும் என அறிவித்த நீதவான் அதன்போது சுகயீனம் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate