பௌத்த பிக்குகளுக்கு இறைச்சி சாப்பிட ஆசை இருந்தால் இரகசியமாக சாப்பிடுங்கள் -அஸ்கிரிய மாநா யக்கர்

மிருகங்களைக் கொன்று பிறந்த நாள் கொண்டாடுபவர்களை பௌத்த பிக்குகள் என்று கூறுவதற்கே வெட்கப்படுவதாக அஸ்கிரிய மாநாயக்கர் ஸ்ரீபுத்தரக்கித்த தேர...

Image result for monk srilanka
மிருகங்களைக் கொன்று பிறந்த நாள் கொண்டாடுபவர்களை பௌத்த பிக்குகள் என்று கூறுவதற்கே வெட்கப்படுவதாக அஸ்கிரிய மாநாயக்கர் ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார்.
 பன்னிபிட்டிய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
சில பௌத்த பிக்குகள் புதுமையான விதத்தில் நடந்து கொள்வதுடன், விகாரமான செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். கடந்த வாரங்களில் பௌத்த பிக்குகள் குறித்து பத்திரிகைகளில் முழுவதும் கூறப்பட்டிருந்ததை பார்த்தேன்.
 பௌத்த பிக்குகளின் இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் மனவருத்தமடைவார்கள்.
 பௌத்த பிக்குகளுக்கு எதற்கு பிறந்தநாள் கொண்டாட்டங்கள்? இவ்வாறான கொண்டாட்டத்தில் புதுமையான ஒரு விடயம் என்னவென்றால் நம் நாட்டின் பிரசித்தமான பௌத்த பிக்கு ஒருவரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு இறைச்சி சாப்பிட்டுள்ளார்.
 பெளத்த பிக்கு ஒருவருக்கு இறைச்சி சாப்பிட ஆசை இருந்தால் யாருக்கும் தெரியாமல் கொண்டுவந்து இரகசியமாக சாப்பிட்டால் பரவாயில்லை.
 இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை.
 சிலருக்கு நான் கூறுவது பிடிக்காது. அப்படியான சில சந்தர்ப்பங்களில் அவர்களை கண்டித்து கடிதம் ஒன்றினை அனுப்புவோம் என அஸ்கிரிய மாநாயக்கர் ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் கூறியுள்ளார்.

Related

இலங்கை 490085855616867499

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item