விடுதலைப் புலிகள் கோட்டைக்குள் மோடிக்கு என்ன வேலை?
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்தி மோடி சிறிலங்கா செல்லவுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் என அ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_87.html

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்தி மோடி சிறிலங்கா செல்லவுள்ளார். இதன்போது யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய பிரதமரின் யாழ்ப்பாண விஜயம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும் என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் செய்யக் கூடும்.
எதிர்வரும் 12ம் திகதி மொரிசியசில் இருந்து இந்தியப் பிரதமர் கொழும்பைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொகமட் நசீட் கைது செய்யப்பட்டுள்ளதால், அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியப் பிரதமர் மாலைதீவுக்குச் செல்வாரா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் கோட்டைக்கு இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ள பயணம், தமிழ்நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக் கூடும்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. தென்னிந்தியாவில் தனது பலத்தைப் பெருக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி முயற்சித்து வருதாக இந்திய ஊடமாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate