கோத்தாபாயவின் நகர அபிவிருத்திக்கு பின்னால் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் அம்பலம்
நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கோத்தாபாய ராஜபக்ச செயற்பட்ட காலகட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி பணிகளுக்குப் பின்னாள் பாரிய ஊழல்...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_8.html

நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கோத்தாபாய ராஜபக்ச செயற்பட்ட காலகட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி பணிகளுக்குப் பின்னாள் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவலை நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் துனேஷ் கண்கந்த தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மோசடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு வீடு மற்றும் காணிகளை இழந்தவர்களுக்கு புதிய அரசாங்கத்தின் கீழ் நிவாரணம் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்ட நகர அபிவிருத்தி நடவடிக்கையின் பின்னால் பல முறைகேடுகளும் ஊழல்களும் இடம்பெற்றுள்ளன.
கண்டறியப்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய அரசாங்கம் நியாத்தை நிறவேற்ற எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக தான் மக்களுக்கு வாக்குறுதி அளிப்பதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.