மஹிந்த ராஜபக்ஷ கொலை செய்யப்படுவாரா?
தனக்கு எதிராக மைத்திரி அரசாங்கம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னையும் தமது குடும்ப உறுப்பின...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_778.html

தன்னையும் தமது குடும்ப உறுப்பினர்களையும், தமது ஆதரவாளர்களையும் இலக்கு வைத்து புதிய அரசாங்கம் பல்வேறு பழிவாங்கும் படலங்களை ஆரம்பித்துள்ளது.
தனக்காக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்களுக்கான எரிபொருட்களும் வரையறுக்கப்பட்டுள்ளதாக மஹிந்த விசனம் வெளியிட்டுள்ளார்.
இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் மக்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
மைத்திரி தலைமையிலான அரசாங்கம் தமக்கு எதிராக சேறு பூசுவதில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறது. தான் முன்னெடுத்த அபிவிருத்திப் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் மஹிந்த குற்றம் சாட்டியுள்ளார்.
1931ம் ஆண்டு முதல் ராஜபக்ஸ குடும்பம் அரசியலில் ஈடுபட்ட போதிலும் இவ்வாறான கடுமையான நெருக்குதல்களை எந்தவொரு அரசாங்கமும் தமது குடும்பத்திற்கு வழங்கியதில்லை எனவும் மஹிந் தனது மனக்குமுறலை மக்கள் முன்னிலையில் கொட்டியுள்ளார்.
விஹாரை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கவுள்ள மஹிந்த, மக்கள் முன்னிலையில் அனுதாபங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல்வேறு விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate