சிறிலங்காவில் மீண்டும் விடுதலைப்புலிகள்?
சிறிலங்காவில் மீண்டும் விடுதலைப் புலிகள் எழுச்சி கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாக புனர்வாழ்வு நடவடிக்கைக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் ஜெகத் விஜயத...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_566.html
இறுதிக்கட்ட போரின் பின்னர் சரணடைந்த 12 ஆயிரத்து 346 போராளிகளில் 6 முதல் 7 சதவீதத்தினர் கரும்புலிகள் என்ற தற்கொலை பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் எவ்வித குற்றங்களையும் மேற்கொள்ளாத போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 12 ஆயிரத்து 77 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், சமூகம் ஆண் போராளிகளை, எளிதாக ஏற்றுக்கொண்ட போதிலும், 2,269 பெண் போராளிகளை புறக்கணித்துள்ளன.
விடுதலைப் புலிகளால் பயிற்சியளிக்கப்பட்ட தற்கொலை போராளிகளின் மனநிலையை மாற்றுவது என்பது கடினமான காரியமாகவே உள்ளது. அவர்களின் மனதில் சிங்களவர்கள் மீதான வெறுப்பு நிலையே மேலோங்கியுள்ளன.
இந்த நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் வாழ்வாதாரம் தொடர்பாக, உரிய நிர்வாக ஏற்பாடுகள் அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும். அதை செய்யாவிட்டால், சிறிலங்காவில் மீண்டும், வன்முறைகள் ஏற்படக்கூடும்.
இதேவேளை 2,172 முன்னாள் போராளிகள் இன்னமும் மறைந்து வாழ்கின்றனர். இவர்களாலும் மீண்டும், இயக்கம் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate