குழப்பத்தில் தவிக்கும் இலங்கை கிரிக்கெட்: தீர்வு கிடைக்குமா?
இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் பெருகிவிட்டது என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இலங்கை அணியின் உலகக்கிண்ண தொடர் தோல்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_704.html

இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் பெருகிவிட்டது என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இலங்கை அணியின் உலகக்கிண்ண தொடர் தோல்விக்கு வீரர்கள் தேர்வில் அரசியல் தலையீடு, பயிற்சியாளர் சரியில்லாதது காரணம் என் இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி) தலைவர் ஜயந்தா தர்மதாசாவுக்கு கடிதம் எழுதப்பட்டது.
இதற்கிடையில், எஸ்.எல்.சியை தற்காலிக கமிட்டி பொறுப்பேற்று நடத்தும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இலங்கை போர்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் பெருகி விட்டன.
ஏப்ரல் 30ல் நடக்கவுள்ள தேர்தலுக்கு முன் இதை சரிசெய்ய வேண்டும். இதனைத்தவிர ஸ்டேட் என்ஜினியரிங் கார்பரேசனுக்கு எஸ்.எல்.சி ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும்.
இது தொடர்பான பண பரிவர்த்தனைகளுக்கு இலங்கை நாடாளுமன்றம் தான் பொறுப்பு. இதனால், விளையாட்டு விதிகளின் படி தற்காலிக கமிட்டி அமைத்து நிர்வகிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கடந்த 2005ல் இதுபோன்ற குழப்பம் ஏற்பட்ட போது தற்காலிக கமிட்டி அமைக்கப்பட்டு 7 ஆண்டுகள் நிர்வகித்தது.
சுதந்திரமாக தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்ட அமைப்பு தான் இருக்க வேண்டும் என்ற ஐ.சி.சி விதிப்படி 2012ல் தற்காலிக கமிட்டி ரத்து செய்யப்பட்டது.
அப்போதைய தற்காலிக கமிட்டியில் உறுப்பினராக இருந்த சிடாத் வெட்டிமுனி, புதிய கமிட்டிக்கு தலைவராக செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Sri Lanka Rupee Exchange Rate