அல்லாஹ்வையும் நபியையும் அசிங்கப்படுத்தி குருநாகலில் சுவரொட்டிகள்
குருநாகல் தம்புள்ளை வீதியோர மாகவுள்ள மதில் சுவர்களில் அல்லாஹ்வையும் நபிகள் (ஸல்) அவர்களையும் தூஷித்து அசிங்கமான முறையில் வசனங்கள் எழுதப்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_692.html
குருநாகல் தம்புள்ளை வீதியோர மாகவுள்ள மதில் சுவர்களில் அல்லாஹ்வையும் நபிகள் (ஸல்) அவர்களையும் தூஷித்து அசிங்கமான முறையில் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்களை கேவலப்படுத்தும் வகையிலான வசனங்களும் எழுதப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்திலுள்ள ஸாஹிரா வீதி பெயர்ப்பலகை கடந்த வருடம் கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் பெயர்ப்பலகைக்கு மை பூசப்பட்ட விடயம் தொடர்பில் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் தொடர்ந்தும் குறித்த பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதையிட்டு முஸ்லிம்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது விடயத்தில் குருநாகல் மாநகர சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றனர்.