மீண்டும் களத்தில் மஹிந்த! பரபரப்பாகும் கொழும்பு
சிறிலங்காவில் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதற்கான சமிக்ஞை இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடை...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_674.html

சிறிலங்காவில் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதற்கான சமிக்ஞை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தொழில்கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட மஹிந்த தீர்மானித்துள்ளதாக, தொழில் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
தமது கட்சியினரும் அதேபோன்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரும் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பர் என்று லியனகே குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகரான லியனகே ஏற்கனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதுடன், அரச ஊடகங்களில் மஹிந்தவுக்காக பிரசாரங்களிலும் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையும் பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையும் பறிபோயுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate