ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான, படை நடவடிக்கையை நீடிப்பதற்கு நாடாளுமன்ற அனுமதியை கோரவுள்ளார் கனடிய பிரதமர்!
கனேடிய அரசு ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான, படை நடவடிக்கையை நீடிப்பதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்போவதாக பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் அறிவித்து...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_657.html
கனேடிய அரசு ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான, படை நடவடிக்கையை நீடிப்பதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்போவதாக பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் அறிவித்துள்ளார். மிசிசாகாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை தெரிவித்த அவர், தற்போதைய நிலையில் சிரியாவிலும் கனடாவின் படை நடவடிக்கை இடம்பெற அனுமதி இருந்தாலும், தற்போது சிரியாவில் படை நடவடிக்கை இடம்பெறவில்லை. எதிர்காலத்தில் அது சிரியாவுக்கும் விரிவாக்கம் செய்யப்படுமா என்பது போன்ற விடயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் ஆராயப்படும் என்று கூறியுள்ளார்.

கடந்த இலையுதிர் காலத்தில் கனடிய அரசு, ஈராக்கில் ஆறு மாத காலத்திற்கு படை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றது. கனேடிய சிறப்புப் படையினர் 69 பேர், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான படைகளுக்கு பயிற்சி வழங்குவதோடு, 6 கனேடிய போர் விமானங்கள் உட்பட, வான்படை விமானங்கள் அங்கு நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதியுடன், அந்த ஆறு மாத காலம் நிறைவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.