சிறிலங்காவிலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவுவார்களா?
உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பொறிக்குள் சிறிலங்கா முஸ்லிம்கள் சிக்க மாட்டார்கள் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்தியாவின்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_605.html
இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் நடைபெறும் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களை விரிவுபடுத்தி உலகின் பல பகுதிகளிலும் காலூன்ற முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். எனினும் சிறிலங்கா முஸ்லிம்கள் ஏனைய சமூகத்தவர்களுடன் சமாதான சம வாழ்வை வாழ்கின்றனர். அவர்கள் இவ்வாறான நிலைமை சிறிலங்காவில் தோன்றுவதை விரும்புவார்கள் என நான் கருதவில்லை.

இந்தியாவும் பாக்கிஸ்தானும், ஜம்மு காஸ்மீர் விவகாரத்திற்கு தீர்வை காண்பதன் மூலமாக புரிந்துணர்வின்மை, நம்பிக்கையின்மை மற்றும் சந்தேகம் ஆகியவற்றிற்கு முடிவுகட்ட வேண்டும். அதற்கு தீர்வை கண்டால் சர்வதேச விவகாரங்களை நோக்கி இன்னமும் சிறந்த விதத்தில் கவனத்தை செலுத்தலாம்.
அயல்நாடுகள் இணைந்து சிந்திக்க வேண்டும். ஒன்று சேர்ந்து பரஸ்பரம் ரீதியாக ஏனையவர்களின் பிரச்சினைக்கு தீர்வை காண முயல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அயல்நாடுகள் இணைந்து சிந்திக்க வேண்டும். ஒன்று சேர்ந்து பரஸ்பரம் ரீதியாக ஏனையவர்களின் பிரச்சினைக்கு தீர்வை காண முயல வேண்டும் என தெரிவித்துள்ளார்.