ஜேர்மனியில் ஐரோப்பிய மத்திய வங்கித் திறப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வன்முறையானது!

ஜேர்மனியின் ஃப்ராங்ஃபேர்ட் நகரில் புதிய ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமையகத் திறப்பு விழாவை எதிர்த்து நிகழ்த்தப் பட்ட சிக்கன எதிர்ப்பு ஆர்ப...


ஜேர்மனியின் ஃப்ராங்ஃபேர்ட் நகரில் புதிய ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமையகத் திறப்பு விழாவை எதிர்த்து நிகழ்த்தப் பட்ட சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் போலிசாருடனான மோதல்களை அடுத்து வன்முறையாக வெடித்தது.

இது குறித்து ஃப்ராங்ஃபேர்ட் போலிஸ் கூறுகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் போலிஸ் அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் ஓர் போலிஸ் நிலையம் மற்றும் பண்டைய ஓப்பெரா இல்லம் போன்றவற்றைத் தாக்கியதால் அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்ட வேண்டி இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வன்முறையில் போலிசார் மீது மக்கள் கற்களை வீசியதால் 94 போலிசார் காயம் அடைந்ததாகவும் பெப்பர் ஸ்பிரே அடிக்கப் பட்டதால் 80 பேர் பாதிக்கப் பட்டதாகவும் கூறியுள்ளனர். இதைவிட 7 போலிஸ் கார்கள் தீயிட்டுக் கொளுத்தப் பட்டுள்ளன. போலிசாருக்கு எதிரான வன்முறைகளுக்காக 5 பேர் கைது செய்யப் பட்டதுடன் 500 பேர் வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டிருப்பதாகவும் ஃப்ராங்ஃபேர்ட் போலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். புதன்கிழமை மதியம் நிலமை கட்டுக்குள் வந்துள்ள போதும் நேற்று மாலை ECB எனும் ஐரோப்பிய மத்திய வங்கி திறப்பு விழாவின் போது இன்னமும் வன்முறைகள் அதிகம் நிகழலாம் என்ற காரணத்தால் பாதுகாப்புப் பலப் படுத்தப் பட்டிருந்தது. 'Blockupy'எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த ஆர்பாட்டக் குழு ECB இன் கொள்கைகள் காரணமாகவே தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது சமீபத்தில் கடுமையான பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப் பட்டுள்ள கிறீஸில் ECB இன் சிக்கனக் கொள்கைகள் காரணமாகக் கடும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கிரேக்க நிதியமைச்சர் அறிவித்திருந்ததை அடுத்து ஏற்பட்ட விழிப்புணர்வே இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. இது குறித்து Blockupy பேச்சாளர் சொங்கா வின்டெர் கூறுகையில், ஐரோப்பாவில் தனது சிக்கனக் கொள்கைகளை ECB உடனே நிறுத்த வேண்டும் என்றும் இக்கொள்கைகள் காரணமாகத் தான் ஐரோப்பாவில் பலத்த வேலை வாய்ப்பின்மை பிரச்சினை தலை தூக்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐரோப்பாவிலுள்ள சுமார் 90 குழுக்களின் கூட்டணியான Blockupy இல் தற்போது கிறீஸை ஆட்சி செய்து வரும் சைரிஷா கட்சியும் அங்கம் வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

உலகம் 4867323276052056746

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item