சந்திரிக்கா தலைமையில் தேசிய ஐக்கிய தலைமையகம்! - அமைக்கப்படும் என ரணில் தகவல்
தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த அடுத்த கட்டம் நோக்கிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் தேசிய...


ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது ஊக்குவிக்கப்படும். நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தென்னாபிரிக்கா போன்று உண்மையை கண்டறிய விசேட குழு அமைக்கப்படும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணை பிரேரணை மற்றும் அதனை கொண்டுவந்த நாடுகள், புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
பான் கீ மூனுடன் கடந்த அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தம் உள்ளிட்ட சில விடயங்களே ஐ,நா மனித உரிமை கவுன்ஸிலில் பிரேரணை முன்வைக்க காரணமாக அமைந்தது. ஆனால் நல்லிணக்க விடயங்களில் சர்வதேசத்திடம் சரணடையத் தேவையில்லை.
நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை. பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.அது குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பழைய முறைபோன்று அல்லாது பயங்கரவாதம் இன்று உலகில் புதிய சொரூபங்களில் வருகி்றது, அதுகுறித்து அவதானமாக இருக்க வேண்டும்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால் பிரதான ஊழல் மோசடிகாரர்களை பிடிக்க சட்டதிட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது.
19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள மக்கள் தீர்ப்பு ஒன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படமாட்டது. அனைத்தும் சட்ட ஆலோசனைபடி பாராளுமன்றில் நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் நீதிமன்றம் பரிந்துரை செய்யும் திருத்தங்களை மேற்கொள்ளத் தயார்.என்றும் கூறினார்.