ஜிம்பாப்வே-வை வீழ்த்தி பாகிஸ்தான் முதல் வெற்றி பெற்றது
உலக கோப்பை போட்டியின் 23-வது ஆட்டத்தில் இன்று 'பி' பிரிவில் உள்ள ஜிம்பாப்வே அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தா...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_5.html

உலக கோப்பை போட்டியின் 23-வது ஆட்டத்தில் இன்று 'பி' பிரிவில் உள்ள ஜிம்பாப்வே அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். பின்னர் 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க வீரர் சிபாபா 9 ரன்னிலும் சிக்கந்தர் ரசா 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த மசகட்சா 29 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு டெய்லர், வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி பாகிஸ்தானுக்கு கடும் சவால் கொடுக்கும் விதமாக விளையாடி வந்தனர்.
இதனால் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது வில்லியம்ஸ் 33 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதனைத்தொடர்ந்து டெய்லர் அரை சதம் அடித்து அவுட் ஆனார். இதனால் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.
8-வது வீரராக களம் இறங்கிய சிகும்புரா 35 ரன் எடுத்தும் பயனில்லை. ஜிம்பாப்வே 49.4 ஓவரில் 215 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பெறும் முதல் வெற்றி இதுவாகும். அரை சதமும், 4 விக்கெட்டுக்களும் வீழ்த்திய ரியாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


Sri Lanka Rupee Exchange Rate