இலங்கை அணி எங்களை தண்டித்து விட்டது: இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மார்கன் புலம்பல்
இங்கிலாந்து அணி 300 ஓட்டங்களுக்கு மேல் இலக்கு வைத்தும் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் அணித்தலைவர் மார்கன் கவலையில் இருக்கிறார். இலங்கை அ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_1.html
இங்கிலாந்து அணி 300 ஓட்டங்களுக்கு மேல் இலக்கு வைத்தும் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் அணித்தலைவர் மார்கன் கவலையில் இருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 309 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் சங்கக்காரா, திரிமான்னே இருவரும் சதம் அடிக்க, இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளைத் தொடர்ந்து தற்போது இலங்கை அணியிடமும் தோல்வியை தழுவியுள்ளது இங்கிலாந்து.
இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து அணித்தலைவர் மார்கன் கூறுகையில், நாங்கள் அனுபவம் வாய்ந்த இலங்கை அணியால் தண்டிக்கப்பட்டு இருக்கிறோம். சிறப்பாக பந்துவீசியும் இலங்கை வீரர்கள் அதை எளிதாக சமாளித்தனர்.
உலகக்கிண்ணத் தொடரில் பல அணிகள் 300 ஓட்டங்களுக்கும் மேல் இலக்கை விரட்டியுள்ளது. ஆனால் சங்கக்காரா, திரிமான்னே ஜோடி சேர்ந்து விரட்டிய விதம் உண்மையில் அபாரமானது.
310 ஓட்டங்கள் என்பது எட்ட முடியாத இலக்கு என்று நினைத்தேன். ஆனால் அந்த எண்ணத்தை இருவரும் சேர்ந்து உடைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.



Sri Lanka Rupee Exchange Rate