உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று ஆஸ்திரேலியா–இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_406.html
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று ஆஸ்திரேலியா–இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். வாட்சன் (67), ஸ்மித் (72), கிளார்க் (68), பிஞ்ச் (24), ஹாடின் (25) ரன்களையும் எடுத்தனர். 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 376 ரன்களை எடுத்து கடினமான இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. அடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் மேக்ஸ்வெல்லுக்கு போட்டியாக சங்ககரா 104 ரன்களை சேர்த்தார். தில்சன் (62) சந்தமால் (52) மாத்யூஸ் (35) ரன்களையும் அடித்தனர். 46.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்களில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது இலங்கை அணி. இலங்கை அணியில் மலிங்கா 2 விக்கெட்டுகளையும், மாத்யூ, பிரசன்னா, தில்சன் தலா 1 விக்கெட்டையும், பெரேரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், ஜான்சன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும், பால்க்னர் 3 விக்கெட்டுகளையும் வாட்சன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்