சிகீரிய சிற்பத்தில் தெரியாமல் என் மகள் எழுதிவிட்டாள், அவளை எப்படியாவது மீட்டுத்தாருங்கள்!-தாயின் அழுகுரல்

சிகீரியாவில் உள்ள சுவரில் எனது மகள் தெரியாமல் எழுதிவிட்டால் அவளுக்கு அதில் எழுதக் கூடாது என்பது தெரியாது தெரியாமல் செய்த எனது மகளுக...

சிகீரியாவில் உள்ள சுவரில் எனது மகள் தெரியாமல் எழுதிவிட்டால் அவளுக்கு அதில் எழுதக் கூடாது என்பது தெரியாது தெரியாமல் செய்த எனது மகளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எப்படியாவது எனது மகளை மீட்டுத்தாருங்கள் என சிகீரிய சிற்பத்தில் எழுதி தண்டனை அனுபவித்துவரும் உதயசிறியின் தாய் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“உதயா” என தனது பெயரை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்ட மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த யுவதிக்கு தம்புள்ளை நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்தது சம்பந்தமாக அவரது தாயார் கருத்துதெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்
எனது மகள் கடந்த 14.02.2015 அன்று தனது நண்பிகளுடன் சிகீரியாவிற்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள சுவரில் பலரது பெயர்கள் எழுதியிருப்பதை கண்டு அதில் தன்னுடைய பெயரையும் எழுதியுள்ளாள் அவளுக்கு அந்த சுவரில் எழுதக் கூடாது என்பது தெரியாது அப்படி தெரிந்திருந்தால் நிச்சயமாக அவள் எழுதியிருக்க மாட்டாள் தெரியாமல் செய்த தவறுக்கு எனது மகளுக்கு கடந்த(02.03.2015) அன்று தம்புள்ளை நீதிமன்றம ;இரண்டு வருட சிறைத் தண்டணை விதித்துள்ளார்கள் . இப்படி நடக்குமென நாம் ஒருபோதும் நினைக்கவில்லை எனது மகளுக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனது மகளின் வருமானத்தில்தான் நான் சீவியம் நடத்திவருகின்றேன். நான் மாவு, அப்பம் விற்றுத்தான் வாழ்ந்துவருகின்றேன்.
எனது மகள் கைது செய்யப்பட்டது பற்றி ஊடகங்களில் பல உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளிவந்துள்ளது அதனை நான் முற்றாக மறுக்கின்றேன்.

சில ஊடகங்கள் எனது மகள் காதலனின் பெயரை எழுதியதாக பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளனர் அது முற்றிலும் தவறான செய்தி எனது மகள் அவளுடைய பெயரையும் அவளது நண்பியின் பெயரின் முதல் எழுத்தையுமே எழுதியுள்ளார் அவர் வேறுயாருடைய பெயரையும் எழுதவில்லை எனவே என்னுடைய மகளை ஊடகங்கள் அவமானப்படுத்தியுள்ளனர் இனியும் அதுபோன்ற செய்திகளை தயவுசெய்து யாரும் வெளியிடவேண்டாம். தவறான செய்திகளை போட்டு எனது பிள்ளையின் வாழ்க்கையை நாசமாக்கிவிடாதீர்கள்.

ஏற்கனவே இதுபோன்று எழுதிய சிலரை ஒரு சில தினங்களில் தண்டப்பணம் மாத்திரம் அறவிட்டு விடுதலை செய்துள்ளார்கள் என அறிகின்றேன் எனவே அது போன்று எனது மகளையும் விடுதலை செய்வதற்கு அரசாங்கமும், எங்களுடைய அரசியல் வாதிகளும் எப்படியாவது உதவி செய்யவேண்டும்.

எங்களுக்கு உதவி செய்வதற்கு யாருமில்லை நாங்கள் எனது மகளை மீட்பதற்கு கடும் கஷ்டப்பட்டோம் சிங்களம் தெரியாததால்  எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவர்கள் கூறியது கூட சரியாக புரியவில்லை கடைசியில் எனது மகளுக்கு இரண்டுவருட சிறைத்தண்டனை விதித்துள்ளார்கள்

எனது மகளை எப்படியாவது மீட்டுத்தாருங்கள் அவள் தவறுதலாக எழுதிவிட்டால் அவளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு உதவி செய்யுங்கள்.

நான் ஒரு நோயாளி எனது மகள் விரைவில் வீடு திரும்பவில்லை என்றால் நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை எனவே எப்படியாவது எனது மகளை மீட்டுத்தாருங்கள் என உங்கள் எல்லோரிடமும் கெஞ்சி மன்றாடி கேட்கின்றேன் என அவர் உறுக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.






Related

கோத்தபாயவுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்: மைத்திரியிடம் கெஞ்சிய மகிந்த!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால...

சோமவன்சவின் பெயரிடப்படாத அரசியல் கட்சியின் மாநாடு இன்று

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான புதிய அரசயல் கட்சியின் ஆரம்ப மாநாடு இன்று இடம்பெறவுள்ளது. புதிய அரசியல் கட்சியின் ஆரம்ப மாநாடு கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பிரதமர் ரணில் தலைமையிலான அமைச்சரவை தொடரும்: மேனக ஹரன்கஹா

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்படாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மேனக ஹரன்கஹா தெரிவித்துள்ளார...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item