யாழ்ப்பாணம் பொம்மைவெளி பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் இடையிலான சந்திப்பு
யாழ்ப்பாணம் பொம்மைவெளி பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. யாழ் ஒ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_284.html
யாழ்ப்பாணம் பொம்மைவெளி பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கும் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
யாழ் ஒஸ்மானியா கல்லூரி புதிய கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் அப்பிரதேச மக்களின் வேண்டுகோளின் படி குறித்த பள்ளிவாசலுக்கு சென்றிருந்தார்.
இதன் போது பள்ளிவாசல் நிர்மாணிப்பிற்கு தேவையான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அப்பகுதி மக்களிற்கான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அமைச்சரினால் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இச்சந்திப்பில் பள்ளிவால் நிர்வாக தலைவர் எம்.கியாஸ் மற்றும் யாழ் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் முஹம்மட் அமீன்.சமூக சேவகர்களான கே.எம் நிலாம்,எம் ராஜு,சரபுல் அனாம்,ஜமால் ஆகியோர் அமைச்சருடன் சென்றிருந்தனர்.




Sri Lanka Rupee Exchange Rate