புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு
நடிகை ஸ்ருதி ஹாஸனை எந்த புதுப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ம...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_255.html

நடிகை ஸ்ருதி ஹாஸனை எந்த புதுப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இயங்கிவரும் பிவிபி நிறுவனம் புதிதாகத் தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடிக்க ஸ்ருதி ஹாஸன் ஒப்பந்தமாகியிருந்தார்.
இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர். வம்சி இயக்குகிறார்.
இந்தப் படத்திலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் திடீரென அறிவித்திருந்தார் ஸ்ருதி ஹாஸன்.
பாதிப்படம் முடிந்த நிலையில் தன்னிடம் திகதிகள் இல்லை எனவே நடிக்க முடியாது என ஈமெயிலில் தகவல் அனுப்பிவிட்டாராம் ஸ்ருதி. உடனே ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் ஸ்ருதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடர்ந்தது பிவிபி நிறுவனம்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு வரை ஸ்ருதி ஹாஸன் புதுப் படங்களில் ஒப்பந்தமாகக் கூடாது; அவரை எந்த நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவும் கூடாது என்றும், இந்த வழக்கு தொடர்பில் சுருதியை பொலிஸார் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate