அதிகாரத்தைக் கைப்பற்ற சூழ்ச்சியில் ஈடுபடும் மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு சார்பான அணி ஒன்றை உருவாக்கி எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறக்க தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிற...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_235.html

இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டங்களை மாவட்டங்கள் தோறும் மேற்கொண்டு மகிந்த அணி ஒன்றை உருவாக்கி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட செய்து, அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது தலா இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அணியாக இந்த அணியை உருவாக்குவதே நோக்கம் எனக் கூறப்படுகிறது.
அத்துடன் இந்த அணியை சேர்ந்த ஒருவருக்கு அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவியை பெற்றுக்கொடுக்கும் திட்டங்களையும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் முன்னெடுத்து வருவதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம் மெதமுலனவில் நடைபெற்றதுடன் மாலை 4 மணிக்கு ஆரம்பமான இந்த கலந்துரையாடல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முக்கிய முடிவுகள் சில எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட மட்டத்தில் மகிந்தவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை ஒன்றிணைத்து, வீடுகள் மட்டத்தில் கலந்துரையாடல்களை நடத்திய பின்னர், மகிந்தவுக்கு ஆதரவான பிரதேச சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை இணைத்து பிரதேச சபைகளின் அதிகாரத்தை தற்காத்து கொள்ளவும் இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைப்பற்றியுள்ளதுடன் மகிந்த ஆதரவாளர்களாக இருந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் தற்போது ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆதரவாளர்களாக மாறியுள்ளனர்.
இதன் காரணமாக மகிந்தவுக்கு ஆதரவாக அவர்களை பயன்படுத்திக்கொள்ள முடியாது போயுள்ளது. இதனால், மகிந்தவுக்கு ஆதரவான தனியான அணி ஒன்றை உருவாக்குவதே கட்சியில் அதிகாரத்தை பெற பொருத்தமான வழி என மெதமுலனவில் நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல மாவட்டங்களில் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கையில் மகிந்த ஆதரவு பாதுகாப்பு தரப்பினருக்கு அதிக பொறுப்புகளை வழங்குவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவுக்கு கீழ்ப்படிந்த அதிகாரிகள் தற்போதும் பொலிஸ் நிலையங்களிலும் இராணுவ முகாம்களில் இருப்பதால், இந்த திட்டத்தை வலுப்படுத்த உதவியாக அமையும் எனவும் இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாவட்டங்கள் மற்றும் தொகுதி வாரியாக மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டுக்கு நல்ல காலம் பிறக்க வேண்டும் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி
நாட்டுக்கு நல்ல காலம் பிறக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் நலன் வேண்டி யாப்பஹூவ ராஜமஹா விகாரையில் இன்று மாலை நடைபெற்ற போதிபூஜையில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த போதிபூஜையின் பலத்தால், பழிவாங்கல்கள், ஆயிரக்கணக்கான மக்களை தொழில்களில் இருந்து வெளியேற்றும் கலாச்சாரம் மாறி நாட்டுக்கு நல்லகாலம் பிறக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு பேசிய முன்னளா் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க, மீண்டும் மகிந்த ராஜபக்ச யுகத்தை ஏற்படுத்த போவதாக தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate