மோடியின் யாழ்ப்பாண பயணம் உள்விவகாரத் தலையீடு! - என்கிறார் சீன ஆய்வாளர்
இந்திய பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் இலங்கையின் உள்ளூர் விடயங்களில் தலையீடு செய்யும் நடவடிக்கையாகும் என்று சீன ஆய்வாளர் ஒருவர் தெரிவ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_228.html

இந்திய பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் இலங்கையின் உள்ளூர் விடயங்களில் தலையீடு செய்யும் நடவடிக்கையாகும் என்று சீன ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது இலங்கை - சீன உறவு குறித்து சீனாவை சிந்திக்க வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் யாழ்ப்பாண பயணத்தை பொறுத்த வரை, சீனாவின் அபிவிருத்தி திட்டங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை விடயத்தில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளமையை சுட்டிக்காட்டுவதாக ஷங்காய் நிறுவனத்தின் சர்வதேச கற்கை நெறியின் உதவி ஆராய்ச்சியாளர் லியு சொன்ங்யா தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையில் உடனடியான தீர்வுக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீனாவின் நல்லெண்ணத்தை இலங்கை மதிக்க தவறினால், சர்வதேச சமூகத்தின் மதிப்பை பெறுவதில் கஷ்டம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களின் மூலம் இந்தியா அண்டை நாடுகள் மத்தியில் அடக்கி ஆளும் முனைப்பை மேற்கொள்ளப் பார்க்கிறது என்றும் லியு சொன்ங்யா தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate