ஜெர்மனியில் இருந்து 70 பெண்கள் ஐ.எஸ். இயகத்தில் இணைய சென்றனர்!
ஜெர்மனியில் இருந்து 9 பள்ளி மாணவிகள் உள்பட 70 பெண்கள் ஐ.எஸ். தீவிரவாத இயகத்தில் இணைய சென்றனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளது. உலகிற்கே ப...
http://kandyskynews.blogspot.com/2015/03/70.html

“70க்கும் மேற்பட்ட பெண்கள் (9 பள்ளி மாணவிகள்) ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைய ஜெர்மனியில் இருந்து வீட்டைவிட்டு வெளியேறி , சிரியா மற்றும் ஈராக் சென்று உள்ளனர்,” என்று ஜெர்மனி உள்நாட்டு உளவுத்துறையின் தலைவர் ஹான்ஸ் ஜியோர்க் மாஸ்சென் தெரிவித்து உள்ளார். சென்றவர்களில் 40 சதவிதம் பேர் 25 வயதுக்கு குறைவானவர்களே என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பெண்கள் அனைவரும் ஆன்-லைன் மூலம் தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளனர். தீவிரவாதிகளை திருமணம் செய்து கொள்ளவும், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் நிர்வாக பொறுப்பு ஆசையில் பெண்கள் சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே வெளிநாட்டு பெண்கள் யாரும் தற்கொலை தீவிரவாதிகளாக பயன்படுத்தப்படுகிறார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்ச்மாத தொடக்கத்தில் ஜெர்மன் உள்துறை மந்திரி பேசுகையில், சுமார் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்டு சுமார் 200 பேர் நாடு திரும்பி உள்ளனர். அவர்களில் சிலருக்கு எதிராக கடும் நடவடிக்கை ஏடுக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate