யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் உட்பட 26 பொது இடங்களில் இன்று முதல் இலவச வைபை இணையச் சேவை!
யாழ். ரயில் நிலையம், யாழ். பொது நூலகம் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட 26 பொது இடங்களில் இன்று முதல் கம்பி இல்லா தொழில்நுட்பம் (Wifi ) மூலம் இ...
http://kandyskynews.blogspot.com/2015/03/26.html

இன்று இந்த சேவையை சம்பிரதாயபூர்வமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர மற்றும் 6 அமைச்சர்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையம், புறக்கோட்டை பொது மற்றும் தனியார் பேருந்து நிலையம், ஸ்ரீ தலதா மாளிகை, புறக்கோட்டை மிதக்கும் சந்தை, கொழும்பு சட்டக் கல்லூரி, கொழும்பு பொது நூலகம், தெஹிவளை மிருகக்காட்சி சாலை, கொழும்பு குதிரைத் திடல், பொலிஸ் தலைமையகம், காலி ரயில் நிலையம், யாழ். ரயில் நிலையம், யாழ். பொது நூலகம், கோட்டை டச்சு வைத்தியசாலை, காலி முகத்திடல், பத்திரமுல்லை நெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையம், கொழும்பு நூதனசாலை, கராப்பிட்டிய வைத்தியசாலை, இரத்தினபுரி நூதனசாலை, பொலனருவ ஆதார வைத்தியசாலை, மாத்தறை பேருந்து நிலையம், பொலணறுவ ரயில் நிலையம், மாத்தறை ரயில் நிலையம், மிரிஜாவில தாவரவியல் பூங்கா, கண்டி ரயில் நிலையம் மற்றும் பேராதனை ரயில் நிலையம் ஆகிய 26 இடங்களிலேயே இந்த சேவை இன்று முதல் இலவசமாக கிடைக்கவிருக்கிறது.


Sri Lanka Rupee Exchange Rate