காபூலில் அதிபர் மாளிகை இருக்கும் பகுதியில் நேற்று தலிபான் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்...
காபூலில் அதிபர் மாளிகை இருக்கும் பகுதியில் நேற்று தலிபான் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 7 பேர் பலியாகி விட்டனர் என்று ஆப்கான் பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலின் மத்திய பகுதியில் மார்க்கெட் பகுதியை ஒட்டி அதிபர் மாளிகை உள்ளது. அதைத் தொடர்ந்து அந்நாட்டின் போலீஸ் தலைமையகம் உள்ளது. இங்குள்ள மார்க்கெட் பகுதியில் நேற்று காலை ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சாலை நடுவே நிறுத்தப்பட்டு இருந்த கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினார்கள்.
தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தற்கொலை படை தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். மேலும் குழந்தைகள், பெண்கள் உட்பட 22 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று ஆப்கான் பாதுகாப்பு