உலகக் கோப்பை: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
இன்றைய உலகக் கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, வெஸ்ட் இண்டீஸ். ...
http://kandyskynews.blogspot.com/2015/03/6.html
இன்றைய உலகக் கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, வெஸ்ட் இண்டீஸ்.

11 ஆவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி தங்களது இன்னிங்சை தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் பந்துவீச்சில் சிதறிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 47.4 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியில் அதிகப்பட்சமாக நசீர் அஸிஸ் 60 ரன்களை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து சுலப இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் சுமித், சார்லஸ், சாமுவேல், ரூஸ்செல் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது. எனினும் கார்டர் மற்றும் ராம்டின் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate