நடராஜா கொலை 3 கடல்படை சிப்பாய்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் !
தமிழ் தேசியகூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என் ரவிராஜின் படுகொலை தொடர்பாக மூன்று கடற்படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ...

http://kandyskynews.blogspot.com/2015/03/3_31.html

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் மூன்று கடற்படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ரவிராஜ் படுகொலை மற்றும் அவருக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2006 இல் இளைஞர்கள் காணமற்போனது குறித்தும் மூன்று அதிகாரிளும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் யாழ் மேயரும் சட்டத்தரணியுமான ரவிராஜ் மகிந்தராஜபக்ச அரசாங்கத்தின் வெள்ளைவான் ஆட்கடத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது