146 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அசத்தில் வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது. இன்...

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது.

இன்று நடைபெற்ற 11ஆவது உலகக்கோப்பை போட்டியின் 36ஆவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் கேப்டன் முகமது தாகிர், பீல்டிங்கை தேர்வு செய்தார்.


அதன்படி தென் ஆப்பிரிக்க அணி தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டக்காரர் ஆம்லா வெறும் 12 ரன்னில் ஏமாற்றினார். பின் வந்த ரோசோவ் மற்றும் குவிண்டன் டி காக் ஜோடி பொறுப்பாக செயல்பட தொடங்கியது. எனினும் காக் 26 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக ரோசோவ் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட டேவிட் மில்லரும் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் இணைந்த கேப்டன் டிவிலியர்ஸ் அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்தி பந்துகளை எல்லை கோட்டிற்கு சிதறடித்தார். அவர் 54 பந்துகளில் அரைச்சதம் எடுத்தார்.

சதம் அடிக்கும் தருவாயில் இருந்த டிவிலியர்ஸ் எதிர்பார விதமாக 99 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் டுமினி 23 ரன்னில் வெளியேற, பெஹார்டியன் வெளுத்து வாங்கினார். அவர் 28 பந்துகளில் [3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] அரைச்சதத்தை எட்டினார்.


இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்களை குவித்தது. இறுதிவரை களத்தில் நின்ற பெஹார்டியன் 31 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். ஐக்கிய அரபு எமிரேட்சில் அதிகபட்சமாக முகமது நவீது 3 விக்கெட்டுகளை சாய்த்தார்/

Related

விளையாட்டு 4077858209042441998

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item