இனவாத பிக்குகளை விரட்டிய அமைச்சர் குணரட்ன
மத பேதங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படாது வெளியேறுமாறு சிஹல ராவய அமைப்பின் பெளத்த பிக்குகளை அமைச்சர் குணரட்ன வீரக்கோன் விரட்டியடித்துள்ளார...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_882.html
மத பேதங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படாது வெளியேறுமாறு சிஹல ராவய அமைப்பின் பெளத்த பிக்குகளை அமைச்சர் குணரட்ன வீரக்கோன் விரட்டியடித்துள்ளார். காலியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடையொன்றை அங்குரார்ப்பணம் செய்வதைத் தடுக்கும் வகையில் சிஹலராவய அமைப்பினர் செயற்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அமைச்சர் அந்த இடத்தைவிட்டு வெளியேறிச் செல்லுமாறு பெளத்த பிக்குகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்த வேளையில் அமைச்சருக்கும் சிஹலராவய பெளத்த பிக்குகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த பெளத்தபிக்கு ஒருவர் அமைச்சரை தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளார். அத்துடன் இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் அவர் அமைச்சரை ஏசியுள்ளார்.அமைச்சரும் பதிலுக்கு இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படவேண்டாம் என பெளத்த பிக்குகளிடம் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate