சிஹல ராவய விடுத்துள்ள தற்கொலை போராட்ட அச்சுறுத்தல்
குருகல பெளத்த விஹாரைகளுக்கு சொந்தமான காணிகள் என சிஹல ராவய என்ற பெளத்த தீவிரவாத அமைப்பு உரிமை கோரும் காணிகளில் இருந்து அங்கு வாழ்பவர்கள் வெள...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_276.html
குருகல பெளத்த விஹாரைகளுக்கு சொந்தமான காணிகள் என சிஹல ராவய என்ற பெளத்த தீவிரவாத அமைப்பு உரிமை கோரும் காணிகளில் இருந்து அங்கு வாழ்பவர்கள் வெளியேற்றப் படாவிட்டால் தற்கொலை செய்துகொள்வோம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளதுசிஹல ராவயவின் தேசிய அமைப்பாளர் அக்மீமன தயாரட்ன தேரர் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளார். குருகல பகுதியில் குடியேறியுள்ள முஸ்லிம்களே சட்டவிரோத குடியேறிகள் என்று சிஹல ராவய குறிப்பிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது , பலாங்கொட குருகல பிரதேசத்தின் 52 ஏக்கர் பௌத்த புனித வலயத்தில் சட்டவிரோதமாக மக்கள் குடியேறியுள்ளனர் குறித்த ”சட்டவிரோத குடியேறிகளை” கடந்த அரசாங்கம் வெளியேற்றியது புதிய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் மீளவும் அவர்களை குடியேற்றி வருகிறார் .”சட்டவிரோத குடியேறிகளை” மீள்குடியேற்ற இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் குறித்த காலத்தில் ”சட்டவிரோத குடியேறிகள்” வெளியேற்றப்படாவிட்டால் தற்கொலைப் போராட்டமொன்று முன்னெடுக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் இருவரான தேரரே கண்டி தலதா மாளிகைக்கு முன்னாள் மாடுகள் அறுக்கப்படுவதை நாட்டில் தடை செய்யக் கோரி தீக்குழித்து தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது , அதேபோன்று இந்த அமைப்பின் உறுப்பினர்க்க தற்கொலை செய்துகொண்டவர் உட்பட தம்புள்ளை மஸ்ஜித் மீதான தாக்குதலிலும் பங்கு பற்றியுள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate