மேல் மாகாண பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருகி வரும் அபாயம்
மேல் மாகாணத்தின் 90 வீதமான பாடசாலைகளின் சுற்றுச்சூழலில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_767.html

மேல் மாகாணத்தின் 90 வீதமான பாடசாலைகளின் சுற்றுச்சூழலில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் , விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவிக்கின்றார்.
குறித்த பாடசாலைகளின் நிர்வாகம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொள்ளவில்லை எனவும் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையானது டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை வலுவற்றதாக்கும் செயற்பாடாக அமைகின்றது என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate