பசில் தன்னை ஓரம்கட்டினாராம்! - சஜின் வாஸ் குணவர்த்தன கூறுகிறார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, தம்மை ஓரம் கட்ட முயற்சித்தார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் வா...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_722.html

முழுப் பிழையையும் அவர் மீதே சுமத்திவிட முடியாது.பசில் ராஜபக்ச என்னுடன் கோபித்துக் கொண்டிருந்தார். எனது விபரங்களை என் பற்றி செய்திகளை அரச ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டாம் எனவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.இந்த விடயங்கள் குறித்து நான் தனியான செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெளிவுபடுத்துகின்றேன்.
என்னிடம் உலங்கு வானூர்தி உண்டு. உலங்கு வானூர்தி வைத்திருப்பது அவ்வளவு பெரிய விடயமல்ல.50 மில்லியன் கொடுத்து உலங்கு வானூர்தி வாங்கினேன். சிலர் 40 மில்லியன் பெறுமதியான வாகனங்களை வைத்திருக்கின்றார்கள்.நான் ஓர் வர்த்தகர், வங்கிக் கடன் பெற்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் பலப்பிட்டியவில் போட்டியிடுவேன் மக்கள் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.