மஹிந்தவுடன் கூட்டிணையும் ரணில்! அதிர்ச்சியில் மைத்திரி

 சிறிலங்காவில் கூட்டு அரசாங்கத்தை அமைந்துள்ள மைத்திரி மற்றும் ரணிலுக்கிடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன...

news_14-02-2015_53ranil சிறிலங்காவில் கூட்டு அரசாங்கத்தை அமைந்துள்ள மைத்திரி மற்றும் ரணிலுக்கிடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 சிறிலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தும் நோக்குடன் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸவுடன் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தி வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


 ஜனாதிபதியாக தெரிவாகி ஒரு மாதம் நிறைவுற்றுள்ள நிலையில் அரசாங்கம் ஊடக கண்காட்சி காட்டுகிறதே தவிர செயற்பாட்டில் ஒன்றும் நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் ஜனாதிபதிக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.


 கண்ணுக்கு தெரியும் அளவு கடந்த அரசாங்கத்தில் குற்றம் புரிந்தவர்கள் குறித்த சாட்சிகள் இருக்கும் போது அவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதால் விருப்பமின்றியேனும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்து செயற்பட வேண்டுடிவரும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


 பொதுமக்கள் அமைதி, கிறிஸ்தவ விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ஜோன் அமரதுங்கவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்தமை ராஜபக்ஸக்களை பாதுகாக்கவா என்ற கேள்வி ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் இடையே எழுந்துள்ளன.


 இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தவிர்க்க முடியாது என ஆலோசகர்கள், மைத்திரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.


 இதேவேளை பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை ஜனாதிபதி 12ம் திகதி சந்தித்தார். அதன்படி கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்கியவர்களை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுக்காவிடின் ஜோன் அமரதுங்க வசமுள்ள பொலிஸ் அதிகாரத்தை தனக்கு கீழ் கொண்டுவர ஜனாதிபதிக்கு நேரிடும் என்பது தெளிவாகப் புலப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

இலங்கை 2054300192139469493

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item