றிசானாவின் மரண தண்டனைக்கு காரணம் யார்? வெளியானது ஆதாரம்….

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூர் றிசானா நபீக் விவகாரத்துக்கு ஜனாதிபதி செயலாளர் பீ.பி. அபயக்கோன் பொறுப்புக் கூற வேண்டும் எ...

Rizanaசவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூர் றிசானா நபீக் விவகாரத்துக்கு ஜனாதிபதி செயலாளர் பீ.பி. அபயக்கோன் பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ,

“றிசானா நபீக்கிற்கு வயதைக் கூட்டி போலியான கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு கையொப்பம் இட்டவர் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளரேயாவார். சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற றிசானாவுக்கு 2013 ஜனவரி 09ஆம் திகதி சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். பீ.பி.அபேகோன் குடிவரவு கட்டுப்பாட்டாளராக இருந்தபோது கப்பம் பெற்றார். பாகிஸ்தான் நாட்டவர்களுக்கு இலங்கை கடவுச்சீட்டு தயாரித்து கொடுத்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுடன் அவர் மிகவும் நெருக்கிய உறவை வைத்திருந்தார். றிசானாவை அனுப்பிய முகவரின் வாக்குமூலம் எம்மிடம் உள்ளது” என்றார்

Related

இலங்கை 5993959052056136139

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item