போர் வெற்றி நாளன்று இம்முறையும் கொண்டாட்டம்! - மகிந்த வழியில் மைத்திரி அரசு.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மே 18 ஆம் திகதியில் இராணுவ நிகழ்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரத...

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மே 18 ஆம் திகதியில் இராணுவ நிகழ்வுகளை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய கூட்டணி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மஹிந்த ஆட்சியில் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்ட 'போர் வெற்றி விழா'வானது பெயர் மாற்றத்துடன் 'இராணுவ பாராட்டு விழா'வாக புதிய ஆட்சியிலும் கொண்டாடப்படவுள்ளது.

புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பங்களிப்பு வழங்கிய முப்படை, பொலிஸ், சிவில் படையணி ஆகியவற்றைக் கெளரவிப்பதற்கும், இதன்போது உயிரிழந்த செய்த முப்படை, பொலிஸ், சிவில் படையணிகளின் அதிகாரிகளை நினைவுகூரவும் 2009 இல் இருந்து வருடாந்தம் மே 18 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்ததோர் தினத்தில் நடைபெறும் யுத்த வெற்றி விழா பேரணியை இவ்வருடத்தில் இராணுவ பாராட்டு நிகழ்வாக நடத்துவது பொருத்தமாக இருக்கும்'' என்ற பிரேரணையை பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியே அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார். இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மே 18ஆம் திகதியை மஹிந்த அரசு சுதந்திர தின நிகழ்வுக்கு ஒப்பான வகையில் கடந்த காலங்களில் கொண்டாடி வந்தது. இது இன நல்லிணக்கத்துக்குப் பெரும் சாபக்கேடு என்று ஜே.வி.பி. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டின. அத்துடன் இவ்வாறான நிகழ்வுகள் தேவையில்லை என்றும் கூறி வந்தன. தற்போதைய ஆட்சியில் பிரதான பங்காளராக இருக்கும் ஐ.தே.க.கூட அன்று மேற்படி நிலைப்பாட்டிலேயே இருந்தது. எனினும், போர் முடிவுக்கு வந்த தினத்தில் அரசு கொண்டாடும் வகையில் ஆட்சி மாற்றத்தின் பின்பும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை கவலையளிப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுதந்திர தினத்தில் நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களையும், இராணுவத்தையும் கெளரவிப்பது பொருத்தமாக இருக்கும் என்றும், எனவே, இதற்குப் பிறிதொரு நிகழ்வு தேவையில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இராணுவ பாராட்டு விழா மே மாதத்தில் நடைபெறும் என மைத்திரி அரசு அறிவித்தாலும், அது எவ்வாறு கொண்டாடப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related

புதிய வரவு செலவுத்திட்டத்தினால் யோசிதவின் தொலைக்காட்சிக்கு ஆப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் தற்போது சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளவருமான கடற்படையதிகாரி யோசித ராஜபக்சவின் தொலைக்காட்சி சனல் தொடர்ந்து இயங்குவதென்றால் ரூ.1000 மில்லியன் அரசுக்கு செலுத...

44 ஆவது பிரதம நீதியரசராக க.ஸ்ரீபவன்! - ஓய்வு பெற்றார் சிராணி

இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக க.ஸ்ரீபவனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறி...

தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஷிராணி ஒரு நாளில் ஓய்வு

இலங்கையில் புதனன்று மீண்டும் பதவி அமர்த்தப்பட்ட தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க வியாழனன்று பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஷிராணியை நாடாளுமன்றம் குற்றஞ்சாட்டி பதவி நீக்கியது தவறு எ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item