டி வில்லியர்ஸ் புதிய உலக சாதனை
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்க அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டி கொக் பெ...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_377.html

நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்க அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டி கொக் பெரிதாக சோபிக்காத போதிலும் அசிம் அம்லா 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.அதனைத் தொடர்ந்து களமிறங்கிய டு பிளசிஸ் 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததன் பின் களமிறங்கிய ஏ பி டி வில்லியஸ் அதிரடியாக துடுப்பெடுத்தாடி இறுதி வரை ஆட்டமிழக்காது 66 பந்துகளில் 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார் இதில் 17 பவுன்டிரிகள் 8 சிக்சர்கள் உள்ளடக்கம்.
இறுதியாக தென்னாபிரிக்க அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 408 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதன் போது ஏ பி டி வில்லியஸ் அதிவேகமாக 150 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டவர் எனும் சாதனையை படைத்தார்.


Sri Lanka Rupee Exchange Rate