நாளை நடைபெறவிருந்த புதுகுடியிருப்பு மற்றும் கரைதுரைப்பற்று பிரதேச சபை தேர்தல் ஒத்திவைப்பு
உயர்நிதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவிற்கமைய ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவிக்க...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_332.html

உயர்நிதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவிற்கமைய ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவிக்கின்றார்.
மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதியரசர்களான அணில் குணரத்ன, சரத் ஆப்ரு மற்றும் பிரியசாத் டெப் ஆகிய நீதியரசர் குழாமினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற தடை உத்தரவை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate