சிங்களவர்களை பிளவுபடுத்தினார் மஹிந்த! நெருக்கடியில் மைத்திரி, சந்திரிகா
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், நிறைவேற்றுக் குழுக் கூட்டம், அகில சிறிலங்கா செயற்குழுக் கூட்டம் ஆகியவற்றை...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_311.html

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், நிறைவேற்றுக் குழுக் கூட்டம், அகில சிறிலங்கா செயற்குழுக் கூட்டம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பொதுத் தேர்தலுக்கு முன்னர் இந்தக் கட்சி இரண்டாக பிளவுபடும் நிலை அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு ஆதரவாக ஒரு குழுவினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக மற்றுமொரு குழுவினருமோ கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்கிடையே பனிப்போர் ஒன்று ஏற்பட்டுள்ளதால் இந்தப் பனிப்போர் கட்சியை பிளவுபடுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்த வைப்பதற்கு ஒரு தரப்பினர் முற்படும் அதேவேளை, மைத்திரி, சந்திரிக்கா ஆகியோருக்கு ஆதரவானவர்கள் இதற்கு முழுமையான எதிர்ப்பை வெளிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் கட்சி பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.