முஸ்லிம் ,கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை குறித்த ஆராய ஆணைகுழு அமைப்பது பற்றி ….
நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு, கிறித்தவர்களுக்கும் எதிராக மேற்கொள்ளபட்டுள்ள ”வெறுப்பு பிரசாரம்” மற்றும் வன்முறைகள் குற...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_258.html

நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு, கிறித்தவர்களுக்கும் எதிராக மேற்கொள்ளபட்டுள்ள ”வெறுப்பு பிரசாரம்” மற்றும் வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஆணைகுழு வொன்றை (Latter)
அமைப்பது தொடர்பில் யோசிக்குமாறு ஜனாதிபதி மைதிரிபாலவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா மற்றும் மத்தியமாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரியுள்ளனர்
மேலும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்ததைப் போல் அளுத்கமை மற்றும் பேருவளை கொலைகளுக்கு தூண்டுகோளாக இருந்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை என அவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு குறிபிட்ட கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல் முஸ்லிம்கள் தொடர்பில் வழங்கப்பட்ட பல உறுதி மொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate