ஜனாதிபதி மைத்திரி இன்று மாலை இந்தியா செல்கிறார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு இன்று மாலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்கின்றார். ஜனாதிபதி மைத்த...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு இன்று மாலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வார்.

இந்தியப் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து விஷேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் அம் மாகாணங்களில் சிவில் நிர்வாகத்தை உறுதி செய்வது போன்ற விடயங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பெருந்தோட்ட துறையில் இந்திய நிதியுதவியுடன் 20,000 வீடுகளை தீர்மானிப்பது தொடர்பான ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்களும் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக செய்திப்பிரிவு தெரிவித்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை புத்தகயாவுக்கு சென்று வழிபடுவர். புதன்கிழமை காலை இக்குழுவினர் திருப்பதி சென்று வழிபடுவர். அன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்புவார்.

Related

இலங்கை 1989629847244176519

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item