லிபியாவின் ஜிகாதிப் பயங்கரவாதம் – ஐரோப்பாவிற்கான நேரடி அச்சுறுத்தல்!!!
“ஜிகாதிப் பயங்கரவாதமானது ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு நேரடியான அச்சுறுத்தலாகும்” எனப் பிரான்சின் பிரதமர் மனுவல் வால்ஸ், சமூக-ஜனநாயகம்...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_137.html

“ஜிகாதிப் பயங்கரவாதமானது ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு நேரடியான அச்சுறுத்தலாகும்” எனப் பிரான்சின் பிரதமர் மனுவல் வால்ஸ், சமூக-ஜனநாயகம் என்ற தலைப்பில் மட்ரிட்டில் நடந்த மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
“எமது எல்லைகளில் இருந்து அதிக தூரமில்லாத, எம் கண்களின் முன்னே உருவாகியுள்ள, லிபியாவின் ஜிகாதிப்பயங்கரவாதம், ஐரோப்பாவின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஒரு புதிய பயங்கரவாதம் லிபியாவில் ஆரம்பித்துள்ளது. இது பற்றிய விவாதத்தை நான் கோருகின்றேன்” எனத் தெரிவித்த பிரான்சின் பிரதமர் மனுவல் வால்ஸ், வெளியாட்கள் அனுமதிக்கப்படாத ரகசியச் சந்திப்பில், ஐரோப்பாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி, இரகசியமாகத் தமது சக ஐரோப்பியப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைகளை நடாத்தி உள்ளார்.
இந்தச் சந்திப்பில் மனுவல்வால்ஸ் உட்பட நான்கு ஐரோப்பியப் பிரதமர்கள் கலந்து கொண்டனர். அது தவிர மற்றைய நாடுகளின் நாற்பது பிரதிநிகள் கலந்து கொண்டுள்ளனர். இங்கு பயங்கரவாதம், வெளிநாட்டு அரசியல் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் ஐரோப்பியக் கொள்கைகள் பற்றி ஆராய்வதற்காகவே இந்தக் கருத்தாரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பிரான்சில், தீவிர மதவாதத்திலும் பயங்கரவாத நடவக்கைகளிலும் ஈடுபடக் கூடிய 3000 பேர், புலனாய்வுத்துறை மற்றும் பயங்கரவாதத் தடைப்பிரிவினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இஸ்லாமியப் பயங்கரவாதம் கடுமையாகக் கண்காணிக்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.