கோட்டாபாய ராஜபக்ஷவின் கொலை கையாள் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றுவிட்டார்..!!

2 005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடந்த சட்டவிரோத ஆட்கடத்...







2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடந்த சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போதல்; போன்ற குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை ஒன்று நடைபெற்று வருகிறது.


விசாரணை நடத்தும் இரகசிய பொலிஸார், கொழும்பு நீதவான் நீதிமன்றின் மூலம் வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் கடற்படை பேச்சாளரும் கடற்படை செயற்பாட்டு பிரிவு பிரதிப் பணிப்பாளருமாகிய பி.கே.தஸநாயக்கவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவுபடி அமெரிக்காவில் கடற்படை டிப்ளோமா ஒன்றுக்காக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார்கள்.


2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை கொழும்பில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போக செய்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் தஸநாயக்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வந்தனர்.


இந்த சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதியும் ஜப்பானுக்கான தூதுவருமான வசந்த கரன்னாகொடவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக இருந்த லெப்டினட் கமாண்டார் சம்பத் முனசிங்கவை கைது செய்து நடத்திய விசாரணைகளில் ,பி.கே. தஸநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்ட கொலை, கடத்தல், காணாமல் போக செய்தல் போன்ற சம்பவங்களுடன் வசந்த கரன்னாகொடவிற்கு நேரடியான தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின.


எனினும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தனது அதிகாரத்தை முறைகேடான வகையில் பயன்படுத்தி போலியான ஆவணங்களை சமர்ப்பித்து தஸநாயக்கவை, அமெரிக்காவில் பாடநெறி ஒன்றுக்காக அனுப்பி வைத்துள்ளார்.


அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அழுத்தங்களை கொடுத்து தஸநாயக்க வெளிநாடு செல்வதற்காக நடவடிக்கைகளை கோட்டாபய மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் குறித்த விசாரணை சம்பந்தமாக கடற்படை அதிகாரிகளை ஆஜர்ப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தகவல் தருமாறு நீதவான் திலின கமகே, கடற்படையின் சட்டப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.





Related

இலங்கை 255176126881091137

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item