பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள் விடுதலை
பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள், அந்நாடு ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்தது. இந்திய மீனவர்கள் விடுதலை குற...
http://kandyskynews.blogspot.com/2015/02/172.html
பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள், அந்நாடு ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்தது.

இந்திய மீனவர்கள் விடுதலை குறித்து, பாகிஸ்தான் நாட்டின் மாலிர் சிறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கராச்சியில் உள்ள மாலிர், லாந்தி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் ரயில் மூலமாக வாகா எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்களது தண்டனைக் காலத்தை முடித்து விட்டவர்கள். மாலிர், லாந்தி சிறைகளில் மேலும் 349 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மாலிர் சிறையின் கண்காணிப்பாளர் முகமது செதோ கூறினார்.
இது குறித்து, லாந்தி சிறையின் கண்காணிப்பாளர் கூறியதாவது:-
மீனவர்கள் தங்களது விடுதலையைக் கொண்டாடும் பொருட்டு அவர்களுக்கு பணமும், பரிசுப் பொருள்களும் கொடுக்கப்பட்டன. அவர்கள் மகிழ்ச்சியோடு நாடு திரும்பினர்' எனறு லாந்தி சிறையின் கண்காணிப்பாளர் குலாம் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே உயர்நிலைப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர்வது என்று இரு நாட்டுப் பிரதமர்களும் முடிவு செய்திருந்த நிலையில், பாகிஸ்தான் அரசு 172 இந்திய மீனவர்களை, விடுதலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate