காணாமல்போன வண்டிகளில் ஒன்று முத்து ஹெட்டிகமாவிடம்
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் முன்னால் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்து ஹெட்டிகமவின் செயலாளர் எனக் கூறப்படும் நபரொருவர் திருத்தவேலைகளுக்...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_964.html
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் முன்னால் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்து ஹெட்டிகமவின் செயலாளர் எனக் கூறப்படும் நபரொருவர் திருத்தவேலைகளுக்காக இன்டெர் கூலர் ஜீப் வண்டியொன்றை வாகனம் பழுதுபார்க்கும் இடத்திற்கு கொண்டு வந்து போட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இவ் ஜீப் வண்டியானது நீர் இன்றி ஓட்டப்பட்டதால் என்ஜீன் பாதிக்கப்பட்டுள்ளதால் வாகனத்தை தொடர்ந்தும் உபயோகிக்க முடியாதுள்ளதாக வாகனத் திருத்துனர் தெரிவித்துள்ளார். காலி ஈரியகொல்லகஹ சந்தியில் உள்ள கராஜில் இவ்வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதன் இன்ஜீன் இலக்கம், வண்டி இலக்கம், சேசி இலக்கம் என்பன இல்லையென தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாகனம் ஜனாதிபதியின் செயலகக் காரியாலயத்திற்குரியது என காலி ஐ.தே.க. உறுப்பினர் ஹெட்டி ஆராச்சி ஜீப் வண்டி தொடர்பாக பொலிசாருக்குத் தகவல் தெரிவித்துள்ள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate