மைத்திரிக்கு ஆதரவு வழங்க தயாராகும் மூன்று முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரசாங்கத்தில் இருந்து பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_87.html
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அரசாங்கத்தில் இருந்து பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.ஆளும் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே மற்றும் பண்டு பண்டாரநாயக்க ஆகிய மூவருமே இவ்வாறு பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் மூவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் தேர்தல் பிரசாரத்திற்கு பங்களிப்பு வழங்குவதில்லை என்றும், தமது தொகுதிகளிலும் எந்த செயற்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை எனவும் கூறப்படுகிறது.
அருந்திக்க பெர்னாண்டோ தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருந்த நேரத்தில் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், 7 நாட்களுக்கு முன்னரே நாடு திரும்பினார்.
அத்துடன் அவருக்கு வழங்கப்பட்ட தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை அவர் விநியோகிக்காதுள்ளதாக கூறப்படுகிறது.
இவரை தவிர பண்டு பண்டாரநாயக்க மற்றும் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் பங்கெடுக்காது இருந்து வருவதுடன் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.