மைத்திரியின் இடத்திற்கு ஜயசிங்க பண்டார
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டது. அவரது இடத்திற்கு டி. ஆர். ஜயசிங்க ப...


2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பொலன்நறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ஜயசிங்க, 21 ஆயிரத்து 878 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் 5 வது இடத்தை அவர் பெற்றிருந்ததுடன் பொலன்நறுவை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டனர்.
1991 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திம்புலாகல பிரதேச சபைக்கு தெரிவான ஜயசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.